8 மாதங்களில் 228 பேர் பலி – தண்டவாளம் கடக்கும் அபாயம் குறித்து தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்டவாளம் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 8 மாதங்களிலேயே மட்டும் 228 பேர் இப்படியான விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாதைகள் வழியாக சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க முயல்வது, ஓடும் ரயிலில் ஏற முயல்வது, படியில் தொங்கிப் பயணிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தான செயல்கள் என


