திருவொற்றியூர் விநாயகபுரம்1வது தெருவை சேர்ந்தவர்.வீரா(எ)வீரபத்திரன் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடி பழக்கத்துக்கு அடிமையான வீரபத்திரன் சில நாட்களாக குடிக்க மது கிடைக்காததால் விரக்தியில் ஆழ்ந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.வீட்டில் இருந்து வெளியே போயிட்டு வருவதாக சொல்லி வெளியே வந்துள்ளார் மன விரக்தியில் இருந்த வீரா. திருவொற்றியூர் மாட்டுமந்தை மேம்பாலத்தில் இருந்து பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளான்.இதில் இடுப்பு கால் பகுதியில் படுகாயம் அடைந் துள்ளது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக இறந்து போனார் இச்சம்பவம் குறித்து.

திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மதுபானம் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி உள்ளது.