சென்னை புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் சமுதாய கூடத்தில் காவலர்களுக்கு துணை ஆணையர் சுப்புலட்சுமி, தலைமையில் மூச்சுப் பயிற்சி யோகா பயிற்சி நடைபெற்றது.

காவலர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் கொரானா வைரஸ் நோய் தொற்றினால் அதிக காவலர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் காவலர்களின் உடல் நலத்தை காக்கும் வகையில் அனைத்து காவலர்களும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் சமுதாய நலக்கூடத்தில் காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி, தலைமையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் ஆண் காவலர்கள் என யோகா பயிற்சியில் கலந்து கொண்டு ஜூம் ஆப் மூலம் நடத்தப்பட்ட யோகா பயிற்சியில் LEDதிரையில் தோன்றுவதை வைத்து காவலர்கள் பயிற்சி பெற்றனர்.