வேலூரில் யோகா ஆசிரியை மர்மமான முறையில் பலி கணவரிடம் போலீசார் விசாரணை.

தேனி மாவட்டம் ஓரகுண்டா பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவருக்கும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதசாலை பகுதியை சேர்ந்த வாசுகி (வயது54) என்பவரின் மகளான ஜீவிதாவுக்கும் (27) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் யோகா ஆசிரியர் வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் சாய்நாதபுரத்தில் உள்ள நடேசன் முதலியார் தெருவில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீவிதா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஜீவிதாவின் கணவர் கருப்பசாமியிடம் விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…