சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெண்கள் தின விழாவை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பெண் காவலர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் பெண்கள் தின விழா புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவலர் சமுதாய நலக் கூடத்தில் இன்று கொண்டாடப்பட்டது

இதில் வண்ணாரப்பேட்டை சரகத்திற்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், தண்டையார்பேட்டை ராயபுரம், உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமிக்கு ஆய்வாளர்கள் மாலை அணிவித்து பூ கொத்து கொடுத்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து துணை ஆணையர் சுப்புலட்சுமி பெண் காவலர்கள் உடன் இனைந்து கேக் வெட்டி பெண்கள் தின விழாவை கொண்டாடினர் பின்பு அவர்களுக்கு அண்பு பரிசாக ரோஜா வழங்கினார்.பெண் காவலர்களுக்கு மண சுமை குறைப்பதற்காக விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் முறையாக பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.