சென்னை எண்ணூரில் ஆட்டோவில் வைத்து கஞ்ஜா விற்ற 3பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா, 2ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். எண்ணூர் கமலம்மாள் நகர் லாக் ரோடு பகுதியில் ஆட்டோவில் வைத்து கஞ்ஜா மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் உக்கிர பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து எண்ணூர் போலீஸ் ஆய்வாளர் புகழேந்தி.உதவி ஆய்வாளர் வடிவேல். மற்றும் போலீசார் லாக்ரோடு பகுதியில் இருட்டில் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த 2 ஆட்டோக்களை மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது ஆட்டோவில் 12 கிலோ கஞ்ஜா விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆட்டோவில் இருந்த வியாசர்பாடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பார்வதி (வயது 30) புளியந்தோப்பு திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த அலமேலு ( 29) அதே பகுதியைச் சேர்ந்த வினோத் (32) மணலி சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த மாதவி ( 37) ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்தனர் அவர்களை எண்ணூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்ஜாவை வாங்கி ரயில் மூலமாக கொண்டு வந்து இரவு நேரங்களில் ஆட்டோவில் மறைவான இடங்களில் இருந்தபடி செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து மொத்தமாக விற்பனை செய்வதாக கூறினர். இதனையடுத்து போலீசார் 12 கிலோ கஞ்ஜாவையும். இரண்டு ஆட்டோக்களை பறிமுதல் செய்து, பார்வதி, அலமேலு மாதவி, வினோத் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.