சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த சந்திரசேகர் வயது40 இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி கள்ளத் தொடர்பில் உள்ளனர். இந்த நிலையில் தனலட்சுமி நடத்தையில் சந்தேகப்பட்டு சந்திரசேகர் 3 வருடமாக பேசாமல் இருந்தனர். இன்று அதிகாலையில் தனலட்சுமி அவருடைய தாய் ரத்தனம் மற்றும் மகள் மூவரும் ஒன்று சேர்ந்து வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகரை எழுப்பி பிரச்சனை செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் வீட்டிற்கு சென்று சமையல் அறையில் பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து மூவரையும் தாக்கினர் இதில் தனலட்சுமி தாய் ரத்தினா சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் தகவலறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் காயம்பட்ட தனலட்சுமி மற்றும் மகள் சிறு காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் சந்திரசேகரை கைது செய்து கொலைக்கான காரணத்தை மேலும் விசாரித்து வருகின்றனர்.