சென்னை மணலியில் நரிக்குறவர்களுக்கு கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபால், மற்றும் சேத்துப்பட்டு அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி மாத்தூர் சாலையில் நரிக்குறவர்கள் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் உலகத்தை அச்சத்தில் ஏற்படுத்திய கொரோன தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து, இவர்கள் எந்தவித தொழிலும் செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள மாத்தூர் வியாபாரிகள் சங்கம் சேர்ந்த தங்ககுமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்‌.ஆர்.தனபாலிடம் நரிக்குறவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார் இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு அரிமா சங்கம் சார்பில் நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்களை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது அவர்களுடன் ஆர்டி.பிரேம்குமார், தங்ககுமார், பழனியப்பன், சத்யநாராயணன், ஜானி, மற்றும் அரிமா சங்கம் குழுவினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டு நரிக்குறவர்கள் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது,