சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்து கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ பெட்டகமும் இலவச மருத்துவ பரிசோதனையும் ஸ்ரீ செல்வம் ஆயுர்வேத மருத்துவமனையில் வழங்கப்பட்டது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை சேவா வாரமாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக கொடுங்கையூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ செல்வம் ஆயுர்வேத மருத்துவமனையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவப் பெட்டகம் அன்னதானம் என நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நடைபெற்றது இந்நிகழ்வில்

மருத்துவ பிரிவு மாநில தலைவர் விஜய்பாண்டியன், மாநில துணைத்தலைவர்கள் அன்பரசு, செந்தில்குமார், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட பார்வையாளர் கோபிகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, பெரம்பூர் தொகுதி மண்டலத் தலைவர் சண்முகம், என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவப் பிரிவின் மாநிலச் செயலாளர் மருத்துவர் ஆர்.பிரசாத் செய்திருந்தார்.