சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல் போலு தெருவில் உள்ள ஓம் வினைதீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் வெகு விமர்சியாக சமூக விலகலுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் கே.ஆர்.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் மகன் டாக்டர் சரத்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ராமஜெயம், பாஜக நிர்வாகி வன்னியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துப்புரவு ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ வியாபாரிகள், ஏழை, எளியோர் என 100 க்கும் மேற்பட்டோருக்கு புடவைகள் வழங்கப்பட்டன. மேலும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.