சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரகாஷ்(24). இவர் தண்டையார்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் தான் எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமியிடம் குற்ற பிணைய பத்திரம் எழுதி கொடுத்திருந்தார். கடந்த 4 ஆம் தேதியன்று தண்டையார்பேட்டை பகுதியில் நடந்த அடிதடி சம்பவத்தில் ஷியாம் பிரகாஷ் ஈடுபட்டுள்ளார்.

குற்ற பிணைய பத்திரம் எழுதி கொடுத்து ஒரு வருடத்திற்கு பிணைய பத்திரத்தை மீறி அவர் குற்ற செயலில் ஈடுபட்டதால் அவரை சிறையில் அடைக்கும்படி துணை ஆணையாளர் உத்தரவிட்டார்.

துணை ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து குற்ற பிணைய பத்திரத்தில் மீதமுள்ள 95 நாட்கள் ஷியாம் பிரகாஷை போலீசார் சிறையில் அடைத்தனர்.