சென்னை: திருவொற்றியூரில் வேல் யாத்திரை, தொடங்க முயன்ற பாஜக மாநில தலைவர் முருகன். கைது செய்யப்பட்டதை, தொடர்ந்து ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.

தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோரோடு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து இன்று மாலை விடுவிக்கப்பட்டது.

பாஜக மாநில தலைவர் முருகன். செய்தியாளர்களை சந்தித்த பொழுது நாங்கள் திட்டமிட்டபடி யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு உயர்நீதிமன்றத்தில் பதில் அளிப்பதாகவும், எந்த ஒரு தடையும் இல்லாமல் நாங்கள் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாளையும் நடக்கும் என்றும் கூறினார்.

தமிழக அரசு தடை விதித்துள்ளது ஒருதலைப்பட்சமாக நடக்கிறதா என்ற கேள்விக்கு, வேல் யாத்திரையை பொருத்தவரை யார் தடுத்து நிறுத்தினாலும், எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்கும் என்று தெரிவித்தார்.