வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு துணிக்கடை பஜாரில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால். நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல திருட்டு கும்பல்கள் மக்களுடன் ஊடுருவி பல குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் காவல்துறையின் கண்காணிப்பில் சிக்கிக்கொண்டு சிறை தண்டனையும் அனுபவித்து வருகின்றனர்.

 

அனைத்து இடங்களிலும் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது, ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற தைரியத்தில் திருடர்கள் மிகவும் தைரியமாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேற்று எம்.சி.ரோட்டில் மிகப்பெரிய துணிக்கடை ஒன்றில் கூட்டநெரிசல் அளவுக்கு மீறி காணப்பட்டதால், ஒரு பெண்மணி துணி எடுப்பது போல் உள்ளே சென்று, துணிகளை திருடி இரண்டு கால் இடைவெளியில் மறைத்துவைத்து. வெளியே செல்ல முயன்றபோது அந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை கண்காணித்து வரும் ஊழியர் பெண் ஊழியரிடம். கூறவே, திருடிய பெண்மணியை உள்ளே அழைத்து வர வைத்து சோதனையிட்டதில். 6 டீசர்ட், திருடியது தெரியவந்தது.

 

உடனடியாக பழைய வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர். அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிர்மலா என்ற அந்த பெண் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, துணிகள் திருடியது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.