சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க , ஆறாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்
மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை 4 நாட்களுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்
ஆனால் சென்னையில் இதுவரை எவ்வித கணக்கெடுப்பு நடத்தாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை, 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.