சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள ஒரு லிட்டர் அளவில் உள்ள உயர் ரக 168 மது பாட்டில்கள் பறிமுதல்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னையில் மதுக்கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.இந்நிலையில் தடையை மீறி மது விற்பனை செய்வதற்காக லாரியில் உயரக மதுவை கடத்தி செல்வதாக வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் திருவெற்றியூர் யார்டு வழியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியை தங்க சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் புஹாரி,தலைமை காவலர்கள் அமுதபாண்டியன், மற்றும் நாகேந்திரன், ஆகியோர் லாரியை மடக்கி பிடித்தனர் பின்னர் அதிலிருந்த சுமார் 10லட்சம் மதிப்புள்ள 163 உயரக மதுபாட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன், மற்றும் ஏழு கிணறு பகுதியை சேர்ந்த முகவர் சரத் சிங், ஆகிய இருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். மற்றும் மது பாட்டில்களின் உரிமையாளர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ரவி தெரிவித்தார்.