கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது, மதுபானம் கிடைக்காததால் விரக்தியில் 10க்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். பல இடங்களில் மதுக்கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கொருக்குபேட்டை, மணலி விரைவு சாலை, கருமாரியம்மன் நகரில் அமைந்துள்ள மதுபான கடையில் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மதுபானங்களை திருட முயன்றனர். மதுபானக் கடைகளின் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து சென்றனர்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கொடி ராஜன். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள் இருவர், மதுபானங்களை திருட பூட்டை உடைத்தது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம் தொடர்புக்கு :8144544644