ராணிப்பேட்டை மாவட்டம் கலவைவட்டம், வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம், சொரையூா், கன்னிகாபுரம், பொன்னம்பலம், தோனிமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பனைமரங்களில் இருந்து அனுமதியின்றி பனை மரத்தின் பாலை இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி. கீதா தலைமையில் 6 ஆய்வாளா்கள் 25 உதவி ஆய்வாளா்கள், 72 போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, பனைமரத்தில் சுரக்கும் பால் அனுமதி இன்றி இறக்கி விற்றுக் கொண்டிருந்த தோனிமேடு பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (38), மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வேலு (23) ஆகிய இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1100 லிட்டா் பனை மரத்தின் பாலை பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோதமாக செய்யும் எந்த தொழிலிலாக இருந்தாலும் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்தனா்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.