சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளை அருகில் செல்லாமல் சுவாச பரிசோதனை செய்யும் தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர்.
கொரோனா தொற்று காவலர்களுக்கு அதிகளவில் பரவி வந்த நிலையில் அதை தடுக்கும் விதமாக போக்குவரத்து காவலர்கள் மதுபோதையில் வரும் நபர்களை சுவாச பரிசோதனை அருகில் செல்லாமல் சுவாச பரிசோதனை செய்யும் கருவியை ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பரிசோதனை செய்துகொண்டு அந்த சுவாச பரிசோதனை செய்யப்பட்ட குழாய்களை அவர்கள் கையாலேயே எடுத்து பாதுகாப்பான ஒரு பகுதியில் போட்டு விட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு தண்டையார்பேட்டை போக்குவரத்து காவலர்கள் வழிமுறை நடத்தி வருகின்றனர்.