தமிழர்களின் பாரம்பரிய கலையாக கருதப்படும் வளரி கலையின் பயிற்சி முகாம் சென்னை எண்ணூர் கடற்கரை அருகே நடைபெற்றது. அகில இந்திய சிலம்பம் பிரீமியர் லீக் எழுவர் குழு விளையாட்டு சங்கம் மற்றும் யுத்த வர்ம சிலம்ப பள்ளி இணைந்து நடத்தியது. ஆசான் அகத்தியா அ.ஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் வஜ்ரம் அறக்கட்டளையின் வளரி ஆசான், எஸ்.காமராஜர். மாணவர்களுக்கு பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார். இதில் சிலம்பம் வளரி , ஊது கொல்லி மற்றும் பல தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்பட்டன. இரண்டு நாள் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள். பங்கேற்று பயிற்சி பெற்றனர். முகாமை துவக்கி வைத்த வளரி ஆசான் எஸ்.காமராஜ் கூறுகையில். வளரி வெள்ளையர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மிக பயங்கரமான ஆயுதம் இது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மருதுசகோதரர்கள் பயன்படுத்திய இந்த ஆயுதம் இலக்கை நோக்கி வீசிய உடன் எதிரிகளை தாக்கி விட்டு மீண்டும் வீசியவர்கள் கைக்கு திரும்ப வரக்கூடியது. இந்த ஆயுத பயிற்சிகளை வெளிநாடுகளில் பூமராங் என்ற பெயரில் மேலைநாடுகள் தன்னகத்தே எடுத்துக்கொண்டது. வெள்ளை ராணுவ வீரர்கள் துப்பாக்கியில் ஒவ்வொரு குண்டாக பொறுத்தி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை சுட்டபோது அதற்கு ஈடாக தமிழர்கள் வளரி என்ற இந்த ஆயுதத்தை பயன்படுத்தினர். இதில் விஷம் தடவி எதிரிகளை குறிபார்த்து வீசி இலக்கை தாக்கினர் அந்த வளரி மீண்டும் கைக்கு திரும்புவதே மகத்தான ஒரு பயிற்சி முறையாகும்.வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த வளரி ஆயுதத்திற்கு அஞ்சி இதனை பயன்படுத்தியவர்களை தூக்கிலிடு கொன்றது. பெரும்பாலானவர்கள் நாடு கடத்தப்பட்டனர் இந்தக் கலையும் ஆயுதமும் அழிக்கப்பட்டது. தமிழர்களின் வீரத்தையும் போர் திறனையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இதனை விளையாட்டுத் துறையில் இணைத்து சிலம்பம் கலையை போன்று மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எங்களைப்போன்ற ஆசான்களை கொண்டு பயிற்சி கொடுக்க வேண்டும் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள சிலம்பம், வளரி , ஊது கொல்லி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மீட்டெடுக்க வேண்டும். எனக் கேட்டுக் கொண்டார். மேலும் சென்னையில் முதல்முறையாக இந்த கலைக்கான பயிற்சி முகாமை நடத்திய பெருமை சித்த வர்ம பள்ளியின் நிறுவனர் சிலம்பம் சண்முகத்தை சாரும் என்று கூறினார். இம்முகாமில் வடசென்னை தமிழர்கள் வீர சிலம்பம் ஆசான் ஜே.துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். -முகேஷ்