கொரோனா வைரஸ் தடுப்பு பணியில், காவல்துறையினர் அரும்பணியாற்றி வருகின்றனர், பல காவலர்கள், கொரோனா நோய் தாக்கி, சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர், கொரோனா வைரஸ் நோய்க்கு, ஐபிஎஸ் அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு விட்டனர், இந்த நிலையில்,புது வண்ணாரப்பேட்டை , காவலர் சமுதாய நலக்கூடத்தில், யோகா ஆசிரியர் துரை முன்னிலையில், துணை ஆணையர் சுப்பு லட்சுமி தலைமையில், 80 காவலர்களுக்கு, மூச்சு பயிற்சியான பிராயணம் என்ற யோகா கற்றுக்கொடுக்கப்பட்டன, இந்த யோகா, கொரோனா தாக்கத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளது, இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் என காவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.