சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட சாஸ்திரி நகர், என்.எஸ்.கே. நகர், வள்ளுவர் தெரு, நெடுஞ்செழியன் நகர், மெயின் தெரு, என சுத்தி உள்ள ஐந்து தெருக்களில் வருடம் முழுவதும் கழிவு நீர்க் கசிவு ஏற்பட்டு வருவதாகவும் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருவதால் 24 மணி நேரமும் கழிவுநீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதியவர்களுக்கு அவ்வப்போது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கை கால்களில் புண், ஏற்படுவது போன்ற சில பிரச்சனைகள் அவ்வப்போது வருவதாகவும் கூறுகின்றனர்.

இப்பகுதிகளில் முறையான அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு நோய் தொற்றிலிருந்து விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கண்ணுக்குத் தெரியாத பல தொற்று நோய்கள் பரவி வரும் நிலையில் அரசும், அரசு அதிகாரிகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆனால் கண்ணுக்குத் தெரிந்த பல ஆண்டுகளாக வருடம் முழுவதும் ரோட்டில் செல்லும் கழிவு நீர்களை கண்டும் காணாமல் போவது மிகவும் மன வருத்தத்தை உருவாக்கியுள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சில கட்சி தலைவர்கள் இப் பகுதியில் வலம் வரும்போது அவர்களுடன் அரசு அதிகாரிகள் வருவதாகக் கூறுவார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் எந்த ஒரு அதிகாரிகளும் மக்கள் பிரச்சினையை வந்து கேட்டதும் இல்லை. எங்கள் பகுதியை வந்து கண்காணிப்பதும் இல்லை. அரசு அதிகாரிகள் யாருக்காக செயல்பட்டு வருகின்றனர் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

குடிநீர் வாரியத்திற்கும், மாநகராட்சி அலுவலகத்திற்கும், சென்று எங்களது பிரச்சினை கூறினாள். வந்து பார்ப்பதாகவும், கூடிய விரைவில் உங்கள் பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என்பதும் பல ஆண்டுகளாக கூறப்படும் அப்பட்டமான பொய் என்று அப்பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.