Three persons arrested for selling drugs in North Chennai 1
வடசென்னையில் புதிய வகை போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை:

வடசென்னையில் புதிய வகை போதைப்பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது விலையுயர்ந்த கார் மோட்டார் சைக்கிள் செல்போன்கள் பறிமுதல். திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கொருக்குப்பேட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவரை காவலர்கள் அமுதபாண்டி வனக்கொடி ஆகியோர் சோதனையிட்டார். அப்போது அவரிடம் மர்மப்பொடி ஒன்று இருந்தது அது ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்தது இதை பார்த்து என்னவென்று கேட்க அவர் சொன்ன பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது இதனால் அந்த பவுடரை பறிமுதல் செய்து திருவொற்றியூர் காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமாரி டம் ஒப்படைத்தார்.

அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு அனுப்பிவைத்தார் அங்கு அதை சோதனை செய்து பார்த்தபோது அந்த பவுடர் மிக விலை உயர்ந்த மெத்தபிட்டமின் என்ற போதை பொருள் எனவும் சர்வதேச மதிப்பில் ஒரு கிராம் பத்தாயிரம் ரூபாய் எனவும் தெரியவந்தது இதையடுத்து வட சென்னை துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் அந்த போதைப் பொருளை சப்ளை செய்யும் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

ராஜேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் ராயபுரத்தை சேர்ந்த காதர் மைதீன் மண்ணடியை சேர்ந்த முகமது அசாருதீன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்த போது அவர்களிடம் 26 கிராம் போதைப்பொருள் இருந்தது அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த ஒரு கார் 2 மோட்டார் சைக்கிள் 5 கைபேசிகள் போதைப்பொருளை துல்லியமாக எடைபோட அதிநவீன எலக்ட்ரானிக் தராசு பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் காரில் இருந்தபடியே போதைப் பொருளை விற்பனை செய்து வந்ததாகவும் தெரிகிறது குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இவர்கள் புனைபெயரில் எம்ஜி அல்லது ஐஸ் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கும் வசதி படைத்த இளைஞர்களுக்கும் விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர் இந்த போதைப்பொருள் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக தமிழகத்திற்கு வந்ததாக தெரிகிறது ஆரம்பத்திலேயே வடசென்னை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் சென்னையில் இதுபோன்ற போதைப்பொருள் தற்போது தான் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது