சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பகுதியில் காத்தாடி, மாஞ்ஞா நூல், வியாபாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடிகட்டிப் பறந்தது பட்டம் விடும் பிரியர்களும் வடசென்னையில் ஏராளம் ஆனால் வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறியது மாஞ்சா நூல் வாகன ஓட்டிகள் ரோட்டில் வாகன ஓட்டி செல்லும் போது கழுத்து பகுதிகளில் மாஞ்சா நூல் பட்டு பல உயிர்சேதம் நடைபெற்றது இதனால் அரசு மாஞ்சா நூல் வியாபாரத்தை முற்றிலும் தடை செய்தது இருந்தும் பல இடங்களில் கள்ளத்தனமாக மாஞ்சா நூல் காத்தாடி விற்பனை நடந்து வருகிறது இணையதளங்களிலும் இன்று வரை விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது. இன்று பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதிகளில் காத்தாடி விற்பனை செய்வதாக பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வு செய்ததில் பழைய வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவை சேர்ந்த முனுசாமி, (55) அதே தெருவை சேர்ந்த மனோஜ்,(23) மாடல் லைன் பகுதியை சேர்ந்த ஜார்ஜ்,(54) என்ற மூன்று நபர்களை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காத்தாடி அதை செய்வதற்கு கலர் பேப்பர் மூங்கில் குச்சிகள் அனைத்தையும் பழைய வண்ணாரப்பேட்டை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.