தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் மூன்று வேளை இலவச உணவு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், தொடங்கி வைத்தார்.

144 தடை உத்தரவினால் கூலி தொழிலாளிகளுக்கு வருமானமின்றி கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால்
ஆர்.கே.நகர் பகுதியில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு
மூன்று வேளையும் இலவச உணவுகள் வழங்குவதை யொட்டி சமூக விதிகளை பின்பற்றுதலுடன்
இன்று 41 வது வட்டம் எழில் நகர், மற்றும் ஜெ.ஜெ.நகரில் வடசென்னை மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இலவச உணவு வழங்கி தொடங்கி வைத்து கொரோனா தொற்று தீவிரத்தை உணர்ந்து அனைவரும் சமூக விலகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில் வட்ட செயலாளர்கள் நித்தியானந்தம், வினாயகமூர்த்தி, சுயம்பலிங்கம், மகேந்திரன், உமாபதி,குமார், குமார்,சுரேஷ்,சேகர், பொன்னுரங்கம்,கண்ணன், நெல்லை சக்திவேல், மகேந்திரன், ஆகியோர் இருந்தனர்.