குன்றுத்தூர் பகுதியில் தழிழன் தொலைகாட்சியில் பணிபுரிந்து வரும் செய்தியாளர் மோசஸ். அப்பகுதியில் நடைபெற்று வரும் கஞ்சாவிற்பனை உள்ளிட்ட சமுகவிரோத செயல்களை துணிச்சலாக படம் பிடித்து செய்தி அனுப்பி வந்தவர்.

இதன் காரணமாக அவ்வப்போது மர்மநபர்கள் கைப்பேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே கைப்பேசியில் பேசி கொண்டிந்த போது தீடிரென வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட அயதங்களை கொண்டு மோசஸ் அவர்களை சரிமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயமைடந்த பத்திரிகையாளர்கள் மோசஸ் சிகிச்சை பலனின்றி குரோம்பேட்டை மருத்துவமனையில், உயிரழந்தார். ஜனநாயகத்தின் 4 வது தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் மீது இது போன்ற படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமுக விரோத செயல்களை தட்டி கேட்டவரகளுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் மோலோங்கினால் ஜனநாயகம் என்பது குழி தோண்டி புதைக்கப்படும்.

பத்திரிகையாளர் மோசஸ் அவர்களை படுகொலை செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கேட்டு கொள்கிறது. உயிரிழந்த மோசஸ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலையும் வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

இதுபோன்ற துயர செயல் நடைபெறமால் தடுக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கேட்டு கொள்கிறது.

தென்னிந்தியா பத்திரிக்கையாளர்கள் யூனியன் மாநில தலைவர்.
ஆர்.சந்திரிகா