சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது இந்த கடை ஊரடங்கு நாள் முதல் மூடி கிடக்கின்றது இந்த நிலையில் நேற்று மதியம்,கடையின் பின் புற வாசலில் கார் விடுவதற்கு பார் உரிமையாளர் ஜெயகுமார் சென்றுள்ளார் அப்போதுஅங்கு ஒரு வாலிபர் கோணிப்பையுடன் நின்றிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் மீது சந்தேகம் வரவே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார் திருவொற்றியூர் காவல் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில் காவலர்கள் விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்து கோணிப்பையை சோதனையிட்டனர் அதில் மதுப்பாட்டில்கள் இருந்தன அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கார்கில் நகரை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 39) என்பது தெரியவந்தது

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையின் கூரையை பிரித்து உள்ளே சென்று மது பாட்டில்களை திருடி சென்ற சதீஷ்குமார் கொள்ளையடித்த மதுப்பாட்டில்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்துள்ளார் பின்னர் போதையில் அங்கிருந்து சென்று விட்டார். காலையில் வந்து பார்த்தபோது அந்த மதுபாட்டில்களை காணவில்லை. அவரை பின் தொடர்ந்து வந்த நபர்கள் அந்த மதுபாட்டில்களை எடுத்து சென்றுவிட்டனர்,

இதனால்விரக்தியடைந்த சதீஷ்குமார் 2வது முறையாக நேற்று கூரைவழியாக நுழைந்து மதுப்பாட்டில்களை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்த போது அவர் வசமாக காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார் அவரிடம் இருந்து,36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 168 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.