சென்னை ஆர் கே நகரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக பொது மக்கள் வெளியே வர இயலாமல் வீட்டினுள்ளேயே முடங்கி உள்ளனர் சில பகுதிகளில் மக்கள் வெளிவர முடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்
இந்நிலையில் வட சென்னை விஜய் மக்கள் இயக்கம் துணைச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி பால் முட்டை காய்கறிகள் போன்றவற்றை ஆர்.கே.நகர் கோபால் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகவும் வீதி வீதியாகவும் சென்று வழங்கி வருகின்றனர் இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரசிகர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.