சென்னை தண்டையார் பேட்டை காவல் நிலையம் அருகே காவல் துறைக்கு சொந்தமான வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அருகில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மெட்ரோ பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் தீ மளமளவென்று வாகனம் முழுவதும் எரிந்தது. அதன் பிறகு காவல்துறை அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மெட்ரோ பணியாளர்கள் தொடர்ந்து தீவிரமாக தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் அருகில் இரு சக்கர வாகனம் இரண்டும் எரிந்து நாசமானது வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் விபத்துக்கான காரணத்தை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தற்போது இருக்கும் சென்னை மாநகரத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் காவலர்கள் பயன்படுத்தும் வாகனம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.