சென்னை, திருவொற்றியூர் பகுதியில், ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, துப்புரவு பணியாளர்களுக்கு, குக்கருடன் கூடிய மளிகை பொருட்கள் வழங்கி கவுரவித்தனர்.

சென்னையில், கொரானோ ஊரடங்கில், தன் உயிரையும் துச்சமாக நினைத்து, விடுப்பு எடுக்காமல் , வீதிகளை தினம்தோறும், துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர், திருவொற்றியூர், கலைஞர் நகரில், துப்புரவு பணியாளர்கள் பணியை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.இந்த நிலையில், அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அப்பகுதியை சேர்ந்த அயப்பன், தேவா, சீனிவாசன், சுவாமி நாதன், ரூப சங்கர், ராஜ்குமார், கமராஜ், லயன் கண்ணையன் மற்றும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து, 25 துப்புரவு பணியாளர்களுக்கு, குக்கர் , அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, பழவகைகள் என கொடுத்தனர்.