தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, சென்னை மாநகரின் தேவையை நிறைவேற்றும் கோயம்பேடு மார்க்கெட் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். மேலும் திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டால் விவசாய பொருட்களையும் விற்க முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு மீது அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியே ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆடி மாதம் முடியும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு பிறகு முகூர்த்த நாட்கள் அதிகளவில் இருப்பதால் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டிருந்தால் அனைத்து தரப்பினருக்கும் அது மேலும் இன்னலை ஏற்படுத்தும்.

எனவே வருகிற 16 ஆம் தேதிக்குள் கோயம்பேட்டை திறக்குமாறு அரசுக்கு இதன் மூலம் வலியுறுத்துகிறோம். இல்லையெனில் தமிழக அரசுக்கு எதிராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது.