சென்னை எண்ணூர் சிவா விஷ்ணு ஆலயம் மற்றும் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை குடும்பத்தினருக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன.
மேலும் அப்பகுதியை சேர்ந்த 400 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சென்னை எண்ணூரில் வசிக்கும் பொதுமக்களுக்கு மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கும் சிவா விஷ்ணு ஆலயம் சார்பாக பத்து நாட்களுக்கு தேவையான அரிசி காய்கறிகள் மற்றும் மத்திய உணவு அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.