ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீரென ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் தனி சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டு நோயாளிகளின் நலம் கருதி மருத்துவமனை வளாகம் முழுவதும் பார்வையிட்டார்.