ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் உட்கோட்ட அளவிலான ரோந்து காவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான கூட்டம் வண்டிமேட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.. இதில் ராணிப்பேட்டை எஸ்பி மயில்வாகனன் தலைமையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவலர்களுக்கான ரோந்து பணி திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது.ராணிப்பேட்டை காவல் உட்கோட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய ரோந்து காவலர்களுக்கு எஸ்பி மயில்வாகனன் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.இதனைதொடர்ந்து எஸ்.பி. மயில்வாகனன் பேசியதாவது: பீட் சிஸ்டம் மூலம் பல இடங்களில் சாராயம் சூதாட்டம் மது விற்பனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. போலீசார் பிறப்பு இறப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகள் போகமுடியாமல் தான் உள்ளது. நான் போலீஸாவதற்கு முன்பு எல்லா பயிற்சிகளிலும் தேர்விலும்  கலந்துகொண்டு வெற்றி பெற்றேன்.யார் வேண்டுமானாலும் டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் ஆகலாம். ஆனால் போலீஸ் ஆகுவதற்கு நல்ல உடல் திறன் உடல் தகுதியும் வேண்டும். காவல்துறையில் பணியாற்றும் நாம் எப்போதும் சிங்கம் போல் கம்பீரமாக இருக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் கஷ்டங்கள் வந்தாலும் நாம் கம்பீரமாக இருக்க வேண்டும். போலீசாரை பார்த்து பொதுமக்கள் பயப்பட கூடாது என்ற நிலை வரவேண்டும். போலீசார் பொது மக்களுக்கு எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும். வாகன தணிக்கையின் போது அவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிந்து வாருங்கள் உங்கள் குடும்பங்களை பாருங்கள் என்று அவர்களிடம் அன்பாக பேசுங்கள். நாம் அனைவரும் எப்போதும் சட்டம் ஒழுங்கு சீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  தமிழ்நாட்டில் பீட் சிஸ்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்உதாரணமான இருக்க வேண்டும். இவ்வாறு எஸ்.பி. மயில்வாகனன் பேசினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. கீதா, இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்பட போலீஸார் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்