சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி பொதுமக்கள் உதவியுடன் சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது பல குற்றச் செயல்களில் காவல்துறையினருக்கு பெரும் அலைச்சலை கொடுக்காமல் முக்கியப் பங்காக சிசிடிவி கேமராவின் பதிவு ஆதாரமாக உள்ளது ஆனால் சில இடங்களில் கேமராக்கள் பயன்பாட்டில் இல்லாமல் தலைகுனிந்து இருப்பதும் பொதுமக்களிடையே பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பராமரிப்பது யார்? பராமரிக்க வேண்டியவர் யார்? என்ற கேள்விகள் பல இடங்களில் எழுகிறது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஒன்றிணையும் முக்கிய இடமான துணிக்கடை அதிகமாக உள்ள இடம் எம்சி ரோடு இடத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா சரியான முறையில் இயங்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.