சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த செல்வின் (வயது 50) இவர் பழைய இருப்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மூன்று சக்கர வாகனத்தில் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர் இன்று அதிகாலை எண்ணூர் தாழம் குப்பத்தில் உள்ள மீன் மார்க்கெட் அருகில் உள்ள கடைக்கு சென்று பால் வாங்க சென்ற போது அந்த கடையில் உள்ள இருப்பு தகடுகளின் மீது மின் ஒயரில் ஏற்ப்பட்ட மின் கசிவால் கடையின் இரும்பு கதவில் மின்சாரம் இருந்துள்ளது இதனை அறியாமல் கதவின் மீது கை வைத்த செல்வியின் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாககவும் . அவரை காப்பாற்ற சேன்ற பால் கடையின் உரிமையாளர் மாதவன் என்பவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார்
உயிரிழந்த நிலையில் இருந்த செல்வியின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.