சென்னை ஆர்கே நகர் தொகுதி காந்தி நகரில் வசித்து வந்தவர் சாமிக்கண்ணு (58) அதே பகுதியில் பல வியாபாரம் செய்து வருகிறார் இந்து பண்டிகை என்றாலே மா இலை தோரணம் விற்பனை செய்வது வழக்கம் இவர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாமர வீடுகளில் சென்று மா இலை பறித்து விற்பனை செய்து வருவது வழக்கம் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மா இலை பறிக்க வீடுவீடாகச் சென்று உள்ளார் அப்போது தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 5 வது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு இரண்டாவது மாடிக்கு சென்று மா இலை பறிக்க முயன்று உள்ளார் அப்போது நிலை தடுமாறி இரண்டாவது மாடியிலிருந்து விழுந்தார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சாமிக்கண்ணு உயிரிழந்தார் இச் சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் காவலர்கள் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் ஆர் கே நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.