சென்னை திருவொற்றியூரில் ஆன்லைனில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்

சென்னையில் ஆன்லைன் மூலம் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை தற்போது அதிகமாகியுள்ளது ஊரடங்கினால் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து நிற்பவர்கள் தற்போது ஆன்லைன் லாட்டரி மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் ஒரு நம்பர் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக சாத்தாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நின்று பேசிக் கொண்டு இருந்தார் போலீசார் வாகனத்தை பார்த்து தப்ப முயன்ற மூன்று பேரையும் போலீசார் விசாரணை செய்ததில் மேடவாக்கத்தைச் சேர்ந்த சுந்தர பாண்டியன், இராயபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ், வண்ணாரப்பேட்டைச் சேர்ந்த ஜெயக்குமார், என தெரியவந்தது பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில்
தாம்பரம் பகுதியை சேர்ந்த முருக நாதன், செல்வராஜ், இருவரையும் கைது செய்து 5 செல்போன், இரண்டு லேப்டாப் போலீசார் கைப்பற்றினர் இதுசம்பந்தமாக மற்றவர்கள் இதில் தொடர்பு இருக்கிறார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.