சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் பல மாதங்களாக கழிவு நீர் தெரு முழுவதும் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது இதுதொடர்பாக அருகாமையில் இருக்கும் அதிகாரிகளை பொதுமக்கள் சந்தித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை இந்த கழிவு நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக மாறி மிக மோசமான நிலையில் உள்ளது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த கழிவுகளை மிதித்து தான் சென்று வருகின்றனர் இதனால் சிலருக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் அவ்வப்போது வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர் தகுந்த அதிகாரிகளின் கண் பார்வைக்கு இந்த செய்திகள் சென்றடைய வேண்டும் பல மாதங்களாக தேங்கி இருக்கும் கழிவு நீரை உடனடியாக சுத்தம் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வடசென்னை பகுதியில் 5 ரூபாய் டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களின் வீடு அந்த தெருவில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக வீடு கட்ட செங்கல் மணல் வீட்டுப் பகுதியில் இறக்கி வைத்தாள் எப்படி நீ வீடு கட்டுகிறாய் உனது வீட்டின் பத்திரத்தை கொண்டு வா, அப்ரூட் இருக்கா, வீடு கட்டும் பிளான் வாங்கி விட்டாயா, என்று கேட்டு பல அதிகாரிகள் வருவதாகவும் இதுபோன்று கழிவுநீர் அடைப்பு சாலை பழுது அடைந்தது போன்ற பிரச்சனை வந்தாள் எந்த ஒரு அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை என்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் மக்களின் பிரச்சினைகளை சரி செய்வதற்காகவும் தான் பல அதிகாரிகளை பல துறைகளில் தமிழக அரசு வைத்துள்ளது ஆனால் அதிகாரிகள் மக்களுக்கு பயன்படும் வகையில் முழுமையாக பணி செய்வதில்லை என்று மக்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.