சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் ரமாபிரபா கணவனை பிரிந்த நிலையில் தன் மகனுக்காகவும் தம் வாழ்வாதாரத்திற்காகவும் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து தனது மகனை எட்டாம் வகுப்பு வரை படிக்கவைத்து வருகிறார்.இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று பழ மற்றும் காய்கறிகளை மினி வேனில் வாங்கி வந்து அஜாக்ஸ் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவைத்து பழம் மற்றும் காய்கறி விபரங்கள் செய்துவிட்டு இரவு நேரத்தில் அந்த வாகனத்திலேயே எடை போடும் இயந்திரம் மற்றும் மீத முள்ள பழம் மற்றும் காய்கறிகளை வைத்து விட்டு செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் யாரோ மினி வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர் இதனையடுத்து நள்ளிரவில் சாத்தாங்காடு போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து உள்ளனர் இதில் மினி வேன் முற்றிலும் எறிந்து சேதமடைந்தது அதில் வைத்திருந்த பழம் மற்றும் காய்கறிகள் முற்றிலும் எரிந்து நாசமானது இதனையடுத்து ரமாபிரபா மற்றும் வேன் உரிமையாளர் நாகராஜ் ஆகியேர் அருகிலுள்ள சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இந்நிலையில் தீ வைத்த மர்ம நபர்கள் நேற்று இரவு எரிந்த நிலையில் உள்ள வாகனத்தில் மிரட்டல் விடும் வகையில் (நாகப்பா 10 ரூபாய் தக்காளியை 80 ரூபாய்க்கு வித்ததால்தான் இந்த வண்டிக்கு இந்த கதி என்றும் அடுத்தது ஆட்டோ தண்டிக்கப்படும் என்றும் மிரட்டல் விடும் வகையில் சாக்பீஸில் எழுதி வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமாபிரபா மீண்டும் சாத்தாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மிரட்டல் விடும் வகையில் எழுதி வைத்தது வியாபாரிக்கு இருந்தாலும் இந்த செயல் காவல்துறையினருக்கு ஒரு சவாலாக உள்ளது.