சென்னை பழைய வண்ணாரப் பேட்டை சின்ன மார்க்கெட் பகுதிகளில் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்வதாக பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் காவல் துறையினர் சோதனை செய்ததில் கிழக்கு கல்லறை சாலை பகுதியில் வசிக்கும் பொம்மி, என்ற பெண் மற்றும் பாபு, இவர்கள் மாவா எனப்படும் போதைப் பாக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது அவர்களிடம் இருந்து சுமார் 70 பொட்டலங்களை பழைய வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.