சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 21 நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சென்னை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்பொழுது கடந்த 22 ஆம் தேதி அன்று சென்ற மீனவர்களும் ஏழு நாட்களில் திரும்பி வருவதாகவும் கால தாமதமாகும் பட்சத்தில் 10 நாட்களுக்குள் திரும்பி வர வேண்டுமென்றும் தற்பொழுது 21 நாட்கள் ஆகியும் வராததால் சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர்களை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்த போதிலும் மீனவர்களை தேடவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மீன்வளத்துறை உதவி இயக்குனர் கூறுகையில் காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கடலோரமாக 4 படகுகளிலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடி வருவதாகவும் கூறினார். மேலும் பத்து மீனவர்களும் சென்ற விசைப்படகில் தகவல் அளிப்பதற்கான ட்ராக்கர் கருவி பொருத்தப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆபத்து நேரிடும் காலத்தில் படகில் பொருத்தப்பட்டுள்ள கருவியின் ஒரு பட்டனை அழுத்தி இருந்தால் எங்ககளுக்கு ஆபத்தில் சிக்கிய படகுகளின் உடைய விபரம் எங்கு மாட்டிக் கொண்டுள்ளார்கள் என்ற விவரமும் வந்திருக்கும் என்றும் ஆனால் இதுவரை
மீனவர்கள் அந்த பட்டனை அழுத்தாதின் காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்,