அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் சூழ்ந்து மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜன்னல் பகுதிகளில் அதிக அளவில் கழிவுகள் நிறைந்து உள்ளது அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதும் அப்பகுதியில் கடந்து செல்லும் நோயாளிகள் துர்நாற்றம் வீசுவது தாங்க முடியாமல் முகத்தை மூடி செல்லும் அவள நிலை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது.அந்தக் கழிவுகள் வெளியே தெரியாமல் காகித அட்டையை வைத்து மூடி வைப்பது மக்களிடையே சிறு பிள்ளைகள் விளையாட்டு வேலை செய்வது போல் தெரிகிறது. கட்டிட வெளி பகுதிகளில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் உடைந்து மனிதக்கழிவுகள் மாடி உயரத்தில் இருந்து சிதறி அப்பகுதியில் நடந்து செல்லும் மனிதர்கள் மீது படுகிறது மற்றும் நடைபாதை முழுவதும் கழிவு நீர் செல்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டால். அவர்கள் வரும் பகுதி மட்டும் சுத்தம் செய்து வைத்துள்ளனர் என்று அப்பகுதி சமூக சேவகர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

கொரான போன்ற வைரஸ்கள் பரவிவரும் இந்நிலையில் அரசு மருத்துவமனையின் நடக்கும் அலட்சிய போக்கு. மிகவும் கண்டிக்கத்தக்கது என்று நோயாளிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து. உடல் நல குறைபாடால் மருத்துவ உதவிக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தங்கி இருக்கும் நோயாளிகள். மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் கூறுகையில் குப்பைமேடு போல் காட்சியளிக்கும் இந்த அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சிய போக்கு கண்டிக்கத்தக்கது தகுந்த அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்.மற்றும் புதுவிதமான கொடிய வைரஸ்கள் இங்கிருந்து பரவி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றும் சிறிய நோயால் அனுமதிக்கப்பட்டு அது பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உயிர் சேதம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.