சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி என்பவர்
கடந்த சில ஆண்டுகளாக மண நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி சாவித்திரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார் அவ்வப்போது சாவித்திரிக்கும் ரவிக்கும் குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று சாவித்திரிக்கும் ரவிக்கும்
இரவு குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த ரவி வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து
சாவித்திரியின் தலையில் ஓங்கி அடித்ததில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெகுநேரம் கதவு திறக்காததால் ரவியின் தாய் சந்தேகம் அடைந்து பார்த்த போது ரத்தம் வெள்ளத்தில் சாவித்திரி பிணமாக இருந்தாள். இச்சம்பவம் குறித்து. கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் உதவியுடன். தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.