ரவுடி கல்வெட்டு ரவியின் தம்பி அப்பு என்ற அன்பழகன் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார் இவர் மீது ராயபுரம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது ஜாமீனில் வெளியே வந்தவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தனது அம்மாவைப் பார்ப்பதற்காக வருவதாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் ரவுடி அப்பு என்ற அன்பழகனை காவல் நிலையம் அழைத்து வந்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.