சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப் திருடி சென்றனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர் தண்டையார்பேட்டை காவல்துறையினருக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டது உடனடியாக விரைந்து சென்ற ரோந்து காவலர்கள் சிவகுமாா், திலிப்குமாா், மற்றும் ஊா்காவல்படை செல்வகுமாா் ஆகியோா் தெரு முழுவதும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர் அங்கு ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் இருவர் பதுங்கி இருந்ததை கண்ட தண்டையார்பேட்டை காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டை நாகப்பன் தெருவை சேர்ந்த மணிகண்டன், (வயது 24) பார்த்தசாரதி மூன்றாவது தெருவை சேர்ந்த தீபக் குமார், (வயது 21) என்பதும் திருட்டு வழக்கில் இவர்கள் தான் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்து இவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த காவலர்கள் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் ஒப்படைத்தனர். உடனடியாக விரைந்து திருடர்களைப் பிடித்த காவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர் இதை தொடர்ந்து இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.