சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயர் கல்லூரியில் அமைந்துள்ள மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு ஊர்காவல் படை காவலர்கள் வடக்கு மண்டல பகுதி கமாண்டர் சஞ்சய் பஞ்சாலி தலைமையில் கபசுர குடிநீர், மாஸ்க், பிஸ்கட் போன்றவற்றை வழங்கி காய்கறிகள் வாங்க வரும்போதோ கூட்டமாக செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில். கமாண்டர் ஜி.பரமசிவம், பிளட்ஒன். கமாண்டர் என்.ராமசுப்ரமணியன், ஏ.எஸ்.உதயகுமார், எம்.முகமது அல்லா பிச்சை, ரத்னவேல் சுப்ரமணியம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.