கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன். இரண்டு லட்ச ரூபாய் காசோலையை திருவொற்றியூர் மண்டல அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார் இதன் மூலம் ஊரடங்கு தடை நீடிக்கும் வரை திருவெற்றியூர் முழுவதும் இயங்கிவரும் அனைத்து அம்மா உணவகங்களிலும் 3 வேளை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து காசோலையை வழங்கியுள்ளார்
முதற்கட்டமாக 2 லட்சம் வழங்கி இருப்பதாகவும் மேலும் பற்றாக்குறை ஏற்ப்பட்டால் மீண்டும் நிதி வழங்க இருப்பதாகவும் மக்களுக்கு குறை இல்லாமல் உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று காசோலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் வழங்கினார் மற்றும் அம்பேத்கார் நகர் உள்ள பகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.