சென்னை, பாரிமுனை, என்.எஸ்.சி போஸ் சாலையில், எல்.ஐ.சி அலுவலகம் உள்ளது, 6 மாடி கட்டடம் ஆகும், முதல் மாடியில், எஸ்.பி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது, மற்ற அனைத்து மாடிகளிலும், எல்.ஐ.சி அலுவலகம் உள்ளது, ஊரடங்கு உத்தரவால்,குறைந்த அளவில் வந்து ஊழியர்கள் வேலை பார்த்து செல்வதாக தெரிகிறது,
இந்த நிலையில், நேற்று அதிகாலை, சுமார் நான்கு மணியளவில், 5 வது மாடியில் இருந்து, கரும்புகை கிளம்பியது, பின்னர், மளமளவென தீப்பரவ ஆரம்பித்தது. கரும்புகையுடன் கூடிய தீ விபத்தை, அப்பகுதி மக்கள் பார்த்ததும், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டன, சம்பவ இடத்திற்கு, எஸ்பிளேனேடு, வேப்பேரி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து, தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன.ராட்சத லிப்ட் மூலம், தீயணைப்பு வீரர்கள் , சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர், இந்த தீ விபத்தில், 5வது மாடியில் இருந்த ஆவணங்கள், கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இது தொடர்பாக, எஸ்பிளேனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், முதல் கட்டமாக, மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது,