தென்காசி மாவட்டம், செட்டியார் கல்லூரணி, ராமாசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன், இவரின் மகள் பவித்ரா(வயது22), இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் , காவலராக பணியாற்றி வருகிறார், சாந்தோம் வினாத்தாள் திருத்தும் இடத்தில் ,பாதுகாப்பு பணியில் இருந்தார், மாதியம் பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்தார், கமாராஜர் சாலை, பாரதி சாலை சந்திப்பில் வந்தார். மேடவாக்கத்தில் இருந்து தண்டையார் பேட்டை நோக்கி, பாமாயில் ஏற்றி வந்த வாகனம் காவலர் பவித்ரா இருசக்கர வாகனத்தில் மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவல் கிடைத்து, அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, லாரி ஓட்டி வந்த ஓட்டுனர் தண்டையார் பேட்டை, சேனியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பலராமன் மகன் ராஜசேகர்(வயது24) என்பவரை கைது செய்தனர், பின்னர், பவித்ரா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.