சென்னை வண்ணாரப்பேட்டையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் கூலித்தொழிலாளர்கள் நிறைந்த குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொட்டலங்களை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் வழங்கினார்

நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் கொரானா வைரஸ் தொற்று ராயபுரம், தண்டையார்பேட்டை, மண்டலங்களில் அதிக அளவில் பரவி வருகிறது இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், சீனிவாசன் நகர், உள்ளிட்ட குடிசைப் பகுதிகளில் அன்றாட கூலி தொழிலாளர்கள் வெளியில் சென்று வேலை செய்ய முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனை அறிந்த வண்ணாரப்பேட்டை சரக காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி வீடு வீடாக சென்று உணவு பொட்டலங்களை வழங்கினார் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது கூட்டம் கூட்டமாக நின்று பேசக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில் நேற்று குடிசை பகுதிகளுக்குச் சென்ற துணை ஆணையர் அப்பகுதி மக்களுக்கு சுவாச கவசம் வழங்கினார் அப்பொழுது உணவுக்கு வழியின்றி தவிப்பதாகவும் சுவாச கவசம் அணிந்தால் பசி தீர்ந்து விடுமா என பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் வைத்தனர் இதனையடுத்து இன்று அப்பகுதியில் சென்ற துணை ஆணையர் வீடுவீடாக அனைவருக்கும் மதிய உணவு பொட்டலங்களை வழங்கினார் மக்களின் குறிப்பறிந்து வாழ்வாதாரம் பாதுகாக்க வீடு வீடாக சென்று காவல்துறை சார்பில் உணவு வழங்கி வரும் காவல் பெண் உயர் அதிகாரியின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.